Monday, 4 July 2011
சீனா
சீனாவில், நான் என் முதல் பனிச்சறுக்கு பாடம் கற்று க்கொண்டேன். அதுவும் நான் ஒரு மணிநேரத்தில் கற்றுகொண்டேன். அது தவிர, நான் உலகத்தில்
பிரபலமான தலை நகரமான பெய்ஜிங் யில் சிவப்பு சதுரம் மற்றும் கோடை கால அரண்மனைகள் பார்த்தேன். தலைநகர் ஓரு பழையநகரம்.முக்கியமாக
உலக அதிசயமான சீனப்பெரும் சுவர் பார்த்தேன்.என்ன ஓரு அற்புதம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சுவர் நீண்டு இருந்தது. நான் சென்ற சமயம் பெய்ஜிங் ல் -5 டிகிரில் மிகவும் குளுமையாக இருந்தது. மற்றும் அனைத்து ஆறுகளும் உறைந்த நிலையில் இருந்தது.அதை பார்க்க ஆச்சரியமாக இருந்தன. ஓலிம்பிக் கட்டடகங்களையும் ரசித்தேன்.
ஆனால் ஷாங்காயில் அறிவியல் அருங்காட்சியகங்கள் நிறைய இருந்தன. நான் சென்ற போது குளிர் அதிகம் இல்லை குளிர் 16 டிகிரி தான். அருங்காட்சியகங்கள் என்னை பரவசப்படுத்தியது. ஷாங்காய் நகரில் கப்பல் பயணம் நன்றாக இருந்தது . மீண்டும் அங்கே போக எனக்கு விரும்பம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment